திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் - ராகுல் காந்தி

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன், அவர் நலமாக உள்ளார் என காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் - ராகுல் காந்தி
x
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என விரும்பியதால் இங்கு வந்தேன். அவருடன் இருந்தது மகிழ்ச்சி. தமிழ் மக்களின் உணர்வுகளில் கருணாநிதி கலந்திருக்கிறார். அவருடன் எங்களுக்கு நீண்ட நாட்கள் உறவு இருப்பதால் அவரை சந்திக்க வேண்டும் என விரும்பினேன். அவர் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் திடமான மனிதர் என்பதால் உடல்நிலையும் சீராகவே இருக்கிறது. அவரை நான் சந்தித்தேன். அவர் நலமாகவே இருக்கிறார். சோனியாகாந்தியும் தன் வாழ்த்துகளை கருணாநிதிக்கு அனுப்பி இருக்கிறார்.Next Story

மேலும் செய்திகள்