இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு : மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கங்கில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாததே இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையாததற்கு காரணம் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 1.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
                                           
                                      திருச்சி சிவா, டி.ராஜா, யெச்சூரி பங்கேற்பு

                                        


இந்த கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும்  மகாத்மா காந்தியின் பேரனுமான  கோபாலகிருஷ்ண காந்தி,   திமுக எம்.பி திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் எம்.பியுமான டி.ராஜா  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

                                        

Next Story

மேலும் செய்திகள்