மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் - அதிமுக எம்.பி.வேணுகோபால் சந்திப்பு

வேணுகோபால் உட்பட 4 எம்.பி.க்களை சந்தித்ததாகவும் மத்திய அமைச்சர் சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் - அதிமுக எம்.பி.வேணுகோபால் சந்திப்பு
x
டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற மக்களவை அதிமுக கட்சியின் தலைவர் வேணுகோபால் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம்,  கோரிக்கை மனு ஒன்றை வேணுகோபால் அளித்தார். அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டத்தில், மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின்,  வசதிக்காக, மருத்துவமனை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, நாடாளுமன்றம் நடைபெறும்போது மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்ற வளாகத்தில் நாள்தோறும் சந்திப்பது வழக்கம் என்றும் அதன்படி, வேணுகோபால் உட்பட 4 எம்.பி.க்களை சந்தித்ததாகவும் மத்திய அமைச்சர் சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்