எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
x
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்காமல், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். முன்னதாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது சகோதரரின் சிகிச்சைக்கு தனி விமானம் அளித்து உதவி செய்ததற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்கவே வந்ததாக கூறினார். தமது டெல்லி பயணம் அரசியல் ரீதியான பயணம் அல்ல என விளக்கம் அளித்தார்.

"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்"

இந்த நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனை சந்திக்கவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
நேரம் ஒதுக்கியதாகவும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவில்லை என்றும்,பாதுகாப்புத்துறை அலுவலக டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார்.Next Story

மேலும் செய்திகள்