18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதி முன் விசாரணை
பதிவு : ஜூலை 24, 2018, 08:47 AM
சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு 2-வது நாளாக இன்றும் விசாரணை தொடர உள்ளது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதைதொடர்ந்து, 3வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணை மாற்றப்பட்ட நிலையில், நேற்று விசாரணை தொடங்கியது.தகுதி நீக்கப்பட்ட18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு மற்றும் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.அப்போது பி.எஸ். ராமன் தனது வாதத்தின் போது, சபாநாயகரின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது, உள்நோக்கம் கொண்டது என்றார்.சபாநாயகரின் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்று நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் கூறியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.ஜக்கையனுக்கும், 18 எம்எல்ஏக்களுக்கும் வெவ்வேறு அளவுகோலின் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவுடன் சேர்ந்து செயல்பட்டனர் என நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதிமுகவை இரண்டாக உடைத்தது ஓபிஎஸ் அணிதான் எனவும், அரசுக்கு எதிராக வாக்களித்த அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அ.தி.மு.க. என்ற கட்சியே இல்லாத நிலையில் எப்படி கட்சித் தாவலில் ஈடுபட்டனர் எனக் கூறமுடியும் என்றும், 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குற்றம் சாட்டினார்.  நேற்று வாதம் முடிவடையாததால் இந்த வழக்கில் இன்றும் வாதம் தொடர்கிறது.

பிற செய்திகள்

மாவட்ட செயலாளர் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்த தினகரன்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சாமராயபட்டியில் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க மாவட்ட செயலாளருமான சண்முகவேலு இல்லத்திற்கு, டி.டி.வி.தினகரன் வருகை தந்தார்.

65 views

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாம்...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.

129 views

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது - அமைச்சர் கருப்பண்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

28 views

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

வேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது

27 views

ஸ்டெர்லைட் கொள்கை முடிவு: தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கோரிக்கைப்படி தாமிர உற்பத்திக்கு தடை என்ற கொள்கை முடிவு எடுத்தால் தமிழகத்தில் தொழில் தொடங்க தொழில் நிறுவனங்கள் முன்வராது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

46 views

இந்தியர்கள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் - ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றார்.

270 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.