மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு - ஸ்டாலின்

பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை கடும் சோதனைக்கு உள்ளாக்கியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு - ஸ்டாலின்
x
இதுதொடர்பாக அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை கடும் சோதனைக்கு உள்ளாக்கியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"மெஜாரிட்டி" இருக்கிறது என்ற காரணத்தால், ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்திற்குள் எதேச்சதிகாரத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். "லோக்பால்" அமைப்பைக் கூட உருவாக்க முடியாமல் உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையிலும் மத்திய அரசு "வாய்தா" வாங்கி கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்று கூறி, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், அரசியல் சட்டம் வழங்கிய "பொதுப்பட்டியல் அதிகாரங்கள்" மற்றும் "மாநிலப் பட்டியல் அதிகாரங்கள்" போன்றவற்றை நீர்த்துப் போக வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு தருவதாக அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்