வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை
x
வீரன் அழகு முத்துக்கோனின் 260வது  பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் தொழில் முனைவோர் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில் இருப்பதாக தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பது உண்மையல்ல என்றும், தொழில் தொடங்க தமிழகம் உகந்த மாநிலம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்