நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் - துணை முதலமைச்சர்

திமுக உறுப்பினர் சேகர்பாபு, ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் - துணை முதலமைச்சர்
x
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, ஊழல் குறித்து விசாரிக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார். 

* அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம், விரைவில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். 

* தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார், 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். 

* மேலும் லோக் ஆயுக்தாவை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் இருந்து பல்வேறு அம்சங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரிலே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

* வரும் திங்களன்று லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வரப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்