"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்" - அமைச்சர் செங்கோட்டையன்

நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கும் என பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்
x
கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு முன்வருமா என்றும் நீட் தேர்ச்சி விகித புள்ளிவிவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாதவை, பழுதடைந்த கட்டடங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு வாரத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்