கருத்து கேட்பு கூட்டம் நடத்தவிடாமல் அன்புமணியை தடுப்பது ஏன்..?

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
கருத்து கேட்பு கூட்டம் நடத்தவிடாமல் அன்புமணியை தடுப்பது ஏன்..?
x
பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க விடாமல் பாமக எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அன்புமணி ராமதாஸூக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாமக துணை பொது செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு  வந்தது. அப்போது விவசாயிகளை சந்திக்க விடாமல் அன்புமணி ராமதாஸை அரசு தடுப்பது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மனுவுக்கு ஜூலை 6 ம் தேதிக்குள் பதிலளிக்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்