சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது - முதலமைச்சர்

சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது - முதலமைச்சர்
x
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பேசிய அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ., நந்தகுமார், சேலம் உருக்காலையை தனியாரிடன் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், சேலம் உருக்காலையை தனியாரிடன் ஒப்படைக்க கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார் என கூறினார். 

மேலும் இதுதொடர்பாக அந்த துறையின் மத்திய அமைச்சருக்கு தான் நேரடியாக கடிதம் எழுதி, வலியுறுத்தி உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்