கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - வைகோ

கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைக்கவே உயர் கல்வி ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - வைகோ
x
கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைக்கவே உயர் கல்வி ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து, கல்வித் துறையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாகவும் வைகோ புகார் தெரிவித்துள்ளார். 

மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் வைகோ வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்