ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு
x
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதன் படி, பேனர், போஸ்டர், கட்அவுட், நோட்டீஸ், சுவரொட்டிகள், செய்திதாள் விளம்பரம் ஆகியவற்றில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் புகைப்படத்தை வலது புறம் பெரிதாகவும், ரஜினி மக்கள் மன்ற முத்திரை தெளிவாக இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த நிகழ்ச்சிகளிலும் மாநில நிர்வாகிகளின் புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டாம் என்றும், பெயர்கள் மட்டும் போதுமானது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்றும், பேனர் அளவை பொறுத்து கவுரவ, இணை, துணைச்செயலாளர்கள், சார்பு அமைப்பு செயலாளர்கள் படம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மண்டல, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படம், மாவட்ட பொறுப்பாளர், செயலாளர் படங்களை விட சிறிதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்