சிறுபான்மை மொழிகளுக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் - அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி

சிறுபான்மை மொழிகளுக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மொழிகளுக்கும் தமிழக அரசு அதிக முக்கியத்துவம் - அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி
x
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தளி தொகுதி திமுக உறுப்பினர் பிரகாஷ் தெலுங்கில் பேசினார். பிற மொழி பேசும் மாணவர்களும் தமிழிலேயே பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்பது கடினமாக உள்ளதாகவும்,   அவர்களது தாய்மொழியிலேயே பொதுத்தேர்வை எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு தெலுங்கில் பதிலளித்த அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, திமுக ஆட்சியில் தான் பிறமொழியைச் சேர்ந்தவர்களும் தமிழில் கட்டாயமாக தேர்வெழுத வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், அதனை அதிமுக  அமல்படுத்தியதாகவும் கூறினார். இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், இருவரும் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தால், அவை குறிப்பில் பதிவு செய்யப்படும், இல்லை எனில் தெலுங்கில் பேசினார்கள் என்றும் மட்டும் பதிவு செய்யப்படும் என கூறினார்.

வீடியோ திருட்டு  - 5,000 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

கடந்த ஆண்டு மட்டும் வீடியோ திருட்டில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது  அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவினர், வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 51 கோடி  ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, செய்தி மற்றும் விளம்பரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ திருட்டில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்