தடையில்லா சான்று கிடைத்ததும் ஓசூருக்கு விமான சேவை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்

பெங்களூருவில் இருந்து தடையில்லா சான்று கிடைத்ததும் ஒசூருக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தடையில்லா சான்று கிடைத்ததும் ஓசூருக்கு விமான சேவை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்
x
பெங்களூருவில் இருந்து தடையில்லா சான்று கிடைத்ததும் ஒசூருக்கு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று, தளி தொகுதி எம்.எல்.ஏ. பிரகாசம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, 'உதான்' திட்டத்தின் கீழ் ஒசூருக்கு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அருகில் கர்நாடக  மாநிலமான பெங்களூருவில் விமான நிலையம் இருப்பதால் அவர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டி இருப்பதாகவும் கூறினார். தடை இல்லா சான்று கிடைத்ததும் ஓசூரில் விமான சேவையை தொடங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்