ஆளுநர் ஆய்வு: சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப தி.மு.க-விற்கு அனுமதி மறுப்பு

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருமாறு ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்காததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
ஆளுநர் ஆய்வு: சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப தி.மு.க-விற்கு அனுமதி மறுப்பு
x
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் ஆய்வு விவகாரத்தை கிளப்பினார். சட்டப்பேரவையில் ஏற்கனவே, ஆளுநரை பதவி நீக்கம் செய்யுமாறு இதற்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை குறிப்பில் உள்ளதாகவும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதலளித்த சபாநாயகர் தனபால், அந்த சம்பவம் 1995ம் ஆண்டில் நடந்ததாகவும், அதன்பிறகு, சபை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், குடியரசு தலைவர், ஆளுநர் போன்றவர்களை பற்றி விமர்சிக்க முடியாது என கூறினார். 



சட்டப்பேரவையில் ஆளுநர் பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை கண்டித்து, வெளிநடப்பு செய்வதாக ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஆளுநர், தனது ஆய்வை தொடர்ந்தால் திமுகவின் போராட்டம் தொடரும்  என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்