"பொதுமக்களின் நலனுக்காக, ஆய்வு பணி தொடரும்"- ஆளுநர் மாளிகை விளக்கம்

மாவட்டம் தோறும் ஆளுநரின் ஆய்வுக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனுக்காக, ஆய்வு பணி தொடரும்- ஆளுநர் மாளிகை விளக்கம்
x
* அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்வதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழக அரசின் எந்தத் துறையின் செயல்பாட்டையும் ஆளுநர் இதுவரை விமர்சித்ததில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

* ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

* சிக்கலான தருணங்களில் சரியான முடிவை எடுப்பதற்கும், மாதம்தோறும் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

* எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தில் ஆய்வு பணிகள் தொடரும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்