அதிமுகவில் இருந்து 2 நிர்வாகிகள் நீக்கம் - ஈபிஎஸ் அதிரடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஜான் கென்னடி மற்றும் சுதாகர் பிரசாத் ஆகியோர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் இருவரும் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன், அதிமுகவை சேர்ந்த யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
