உணவு பொருட்களில் எச்சில் துப்பினால் ரூ.1 லட்சம் அபராதம்... உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை

x

உணவு பொருட்களில் எச்சில் துப்பினால் ரூ.1 லட்சம் அபராதம்... உத்தரகாண்ட் முதல்வர் எச்சரிக்கை


உத்தரகாண்ட் மாநிலத்தில் உணவு பொருட்கள் மீது எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோர கடையில் எச்சில் துப்பி தேநீர் விநியோகம் செய்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த சூழலில், உணவுப் பொருட்களின் மீது எச்சில் துப்புவது மற்றும் விரும்பதாகத பொருட்களை கலப்படம் செய்து விற்பனை செய்வது போன்ற செயல்களை சகித்துக் கொள்ள முடியாது என உத்தரக்கண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்