நடுக்கடலில் உயிருக்கு போராடிய சிறுவன்.. விநாயகரே வந்து காப்பாற்றிய அதிசயம்

x

சூரத் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 சிறார்கள், தங்களது பாட்டியுடன் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, துமாஷ் கடற்கரையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் சென்றிருந்தனர். பாட்டியின் எச்சரிக்கையும் மீறி சிறுவர்கள் கடலுக்குள் இறங்கிய நிலையில், இருவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். பொதுமக்கள் ஒருவனை காப்பாற்றிய நிலையில், 13 வயது சிறுவன் காணாமல் போனார். சிறுவனின் குடும்பத்தினர் துயரத்தில் தோய்ந்து இருக்க சிறுவனின் தந்தையான விகாஸ் என்பவர் கடற்கரையில் நம்பிக்கையுடன் காத்திருந்தார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக நவ்சராய் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தபோது கடலில் இருந்து சுமார் 22 நாடிக்கள் மைல் தொலைவில் சிறுவன் ஒருவன் மாட்டிக்கொண்டு உதவிக்காக காத்துக் கொண்டிருப்பதை கண்டார். கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையின் பாகம் ஒன்றை சிறுவன் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்ததால், கடலுக்குள் மூழ்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.மீனவர்கள் அந்த சிறுவனை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்