'காப்பாத்துங்க..'போலீசுக்கு பயந்து கிணற்றில் விழுந்த இளைஞர்.. உயிரை கொடுத்து மீட்ட காவல்துறை
'காப்பாத்துங்க..'போலீசுக்கு பயந்து கிணற்றில் விழுந்த இளைஞர்.. உயிரை கொடுத்து மீட்ட காவல்துறை
இதுக்கு மேல முடியாது..! 'காப்பாத்துங்க..'போலீசுக்கு பயந்து கிணற்றில் விழுந்த இளைஞர்.. உயிரை கொடுத்து மீட்ட காவல்துறை
கேரளாவில் போலீசாருக்கு பயந்து ஓடிய போது கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர் 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
இடுக்கி மாவட்டம் கைலாசபாறை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் போலீசாரை பார்த்ததும் பைக்கைவிட்டு தப்பியோட முயன்றார். போலீசார் துரத்திய நிலையில், அந்த இளைஞர் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். போலீசார் சென்ற பிறகு பைப்பை பிடித்து ஏறிவிடலாம் என்று நினைத்த இளைஞர் மூன்று மணி நேரத்திற்கு மேல் கிணற்றுக்குள் மறைந்திருந்தார். பின்னர் பைப் மூலம் ஏற முயன்ற போது, முடியாததால் காப்பாற்றும்படி கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசார் உதவியுடன் இளைஞரை மீட்டனர்.