கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் - நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

x

கேரளா மாநிலம், பாலக்காடு முதலாமடா பகுதியில் தனியார் பன்றி பண்ணை அமைந்துள்ளது.

இங்கு தொடர்ச்சியாக பன்றிகள் உயிரிழந்ததையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மிருண்மயி ஜோஷி மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, பன்றி பண்ணையை சுற்றியுள்ள 1 கிலோ மீட்டர் பகுதி தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளில் இருக்கும் பண்ணைகளில் பன்றிகளை கண்காணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பன்றிப் பண்ணைகளில் பணியாற்றுபவர்களின் ரத்த மாதிரிகள், உடல்நிலை பரிசோதனை செய்யப்படவுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு திட்ட அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்