"குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் காப்பீடு தொகையை மறுக்க முடியாது" - கேரள உயர்நீதிமன்றம்

x

"குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் காப்பீடு தொகையை மறுக்க முடியாது" - கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2009-ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில், நீர்பாசனத்துறை ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார்.

உடற்கூராய்வு மற்றும் ரத்தப் பரிசோதனை அறிக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரின் உடலில் சட்டப்படி வரம்பை மீறி மது அளவு இருந்ததாகக் கூறி, காப்பீட்டுத் தொகை வழங்க மறுக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்தால், அவரது பெயரில் காப்பீடு தொகையை மறுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், அளவைத் தாண்டி, போதைக்கான மதுவின் அளவு நபருக்கு நபர் மாறுபடும் எனவும், குறைந்த அளவு மது அருந்திய நபர் அதிக அளவு போதை அடைவதற்கும் வாய்ப்பு உள்ளது எனவும், இது அவரவர் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் எனவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்