இந்தியாவிலேயே முதல் முறையாக.. நீருக்கு அடியில் மெட்ரோ.. பிரம்மாண்ட திட்டத்தை தொடங்கும் பிரதமர்

x

இந்தியாவில் முதன்முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை, கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதன்முறையாக ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் 35 மீட்டர் ஆழத்தில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில் சேவை இதுவாகும்.தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் செல்லும். இந்த சுரங்கப்பாதைகள், 120 ஆண்டுகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்