கோயில் சிலை சேதம் - வெடித்த போராட்டம்... தடியடி பரபரப்பு

x

கோயில் சிலை சேதம் - வெடித்த போராட்டம்... தடியடி பரபரப்பு

ஹைதராபாத்தில் உள்ள முத்தியாலம்மன் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அந்த கோயிலில் உள்ள சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோயில் முன்பு திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்