வெள்ளத்தில் மிதக்கும் மயானம்.. உடலை அடக்கம் செய்யாமல் தத்தளிக்கும் மக்கள்.. ஒசூரில் அவலம்!

x

வெள்ளத்தில் மிதக்கும் மயானம்.. உடலை அடக்கம் செய்யாமல் தத்தளிக்கும் மக்கள்.. ஒசூரில் அவலம்!

ஒசூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் மழை நீர் தேங்கியதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பொது மக்கள் தவித்தனர்.

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கர்னூர் பகுதியில் பகுதியில் பெய்த கன மழை காரணமாக மயானத்திற்கு செல்லும் பாதையில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், கர்னூரை சேர்ந்த தேவராஜ் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது உடலை, தேங்கிய மழை நீர் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இறந்தவரின் உடலை நீண்ட நேரம் அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் வைத்திருந்தனர். இது குறித்து அறிந்த மத்திகிரி போலீசார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் ஆகியோர் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல நிரந்தரமாக பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கன்னூர் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்