வீடு வீடாக குக்கர் வினியோகம்..நள்ளிரவில் தீயாய் பரவிய வீடியோ..அசால்ட்டாக பதில் சொன்ன கும்பல்

x

#puducherry

வீடு வீடாக குக்கர் வினியோகம்..நள்ளிரவில் தீயாய் பரவிய வீடியோ..அசால்ட்டாக பதில் சொன்ன கும்பல் - திடீர் என்ட்ரி கொடுத்த பறக்கும் படை

புதுச்சேரி காரைக்காலில், வாக்காளர்களுக்கு வீடு வீடாக குக்கர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில், மினி வேன் மூலம் வாக்களர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், 3 குக்கர்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், குக்கர் இருந்த மினி வேனுடன் தப்பிச் சென்றவரை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்