டெல்லி G20 மாநாடு - தவிர்க்கும் உலக தலைவர்கள்?

x

டெல்லியில் ஜி-20 மாநாடு வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ஜி-20 நாடுகளில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா, பிரசில், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களுக்கும், பங்களாதேஷ், எகிப்து, நெதர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட 9 நாட்டுத்தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ரஷ்யா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. சீன அதிபர் ஜி-ஜின்பிங் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜி-20 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டை தங்கள் சொந்த காரணங்களுக்காக தவிர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடந்துள்ள ஜி-20 மாநாடுகளில் அனைத்து நாடுகளும் கலந்துகொள்ளாத நிலையில், சில நாடுகளின் இந்த முடிவு, டெல்லி ஜி-20 மாநாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்