2 மாநிலங்களை குறிவைத்து விளம்பரத்திற்கு காசை வாரி வாரி இறைக்கும் பாஜக

x

கார்ப்பரேட் நிறுவனங்களையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு பேஸ்புக் விளம்பரங்களுக்கு பாஜக செலவு செய்து வருவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

விரைவில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தற்போது தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி விட்டன, அரசியல் கட்சிகள்.

இந்நிலையில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை... பேஸ்புக் விளம்பரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் தொடர்பான பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் கார்ப்பரேட் நிறுவனங்களையே பின்னுக்கு தள்ளி.... பேஸ்புக் விளம்பரத்திற்கு அதிகம் செலவழித்து இருக்கிறது, பாஜக. இதில் பேஸ்புக் விளம்பரத்திற்கு அதிக செலவு செய்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களிலும் பாஜக இருப்பது தான் ஆச்சரியம்.

டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்களை பெரும் பிரச்சார மேடையாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருவதற்கு இந்த பட்டியலும் ஒரு சான்று.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் அரசுக்கு எதிராக பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய மட்டும் பாஜக 35 லட்ச ரூபாய் செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இரண்டாவதாக மத்திய பிரதேசத்தில் 'மத்திய பிரதேசத்தின் இதயத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்' என்ற taglineஐ வைத்துக்கொண்டு... மத்திய பிரதேசத்தின் தேர்தல் முகமாக பிரதமர் மோடியை வைத்து மேற்கொண்ட பேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் பாஜக 28 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது.

மூன்றாவதாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்திற்கு எதிராக 'ஊழல் நாத்' என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக அதற்காக மட்டும் பேஸ்புக் விளம்பரத்திற்கு 21 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது.

நான்காவதாக பிரபல தனியார் வங்கி நிறுவனமான Axis வங்கியும்... ஐந்தாவதாக Kutumb App's Crafto நிறுவனமும் பேஸ்புக் விளம்பரத்திற்காக அதிகம் செலவு செய்துள்ளன.

பேஸ்புக் விளம்பரத்திற்காக அதிகம் செலவு செய்பவர்களின் பட்டியலில்... டாப் 20 இடங்களை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் சார்பில் இரண்டு விளம்பரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுமே சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ளவை.

ஒன்பதாவது இடத்தில்... 'நம் மாமா இன்னும் உயிரோடு இருக்கிறார்' என பூபேஷ் ஆதரவாக பேஸ்புக் விளம்பரத்திற்கு 7 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதும்...

பிறகு 17வது இடத்தில்... 'பூபேஷ் இருக்கும் வரை அவரையே நம்புவோம்' என்ற விளம்பரத்திற்காக நான்கு லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக மாநில தேர்தல்களை குறி வைத்து பாஜகவே விளம்பரத்திற்கு அதிக அளவில் செலவு செய்து வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் விளம்பரத்திற்காக மட்டும் பாஜக

93 லட்சம் செலவு செய்துள்ள நிலையில், ராஜஸ்தானில்

92 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

விளம்பரத்திற்காக காசை வாரி இறைக்கும் பாஜக

பேஸ்புக் விளம்பரம் - அதிக செலவு Sub Header

1. ராஜஸ்தான் அரசுக்கு

எதிரான விளம்பரங்களுக்கு

ரூ.35 லட்சம்

2. மத்திய பிரதேசத்தின்

பாஜக முகமாக

பிரதமர் மோடி - ரூ.28 லட்சம்

3. மத்திய பிரதேசத்தில்

காங்கிரஸ் தலைவர்

கமல் நாத்துக்கு எதிராக - ரூ.21 லட்சம்

4வது இடம் - Axis வங்கி

5வது இடம் - Kutumb App's Crafto (கிரஃப்டோ)

பேஸ்புக் விளம்பரம்

அதிக செலவு டாப் -20

இரண்டே இடத்தில் காங்.,

9வது இடம் -

சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு

ஆதரவாக காங்., விளம்பரம்

17வது இடம் -

சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு

ஆதரவாக காங்., விளம்பரம்

விளம்பரத்திற்காக வாரி இறைக்கும் பாஜக - header

மத்திய பிரதேசத்தில்

விளம்பரத்திற்காக ரூ.93 லட்சம்

ராஜஸ்தானில்

விளம்பரத்திற்காக ரூ.92 லட்சம்

3 வது இடம்

மகாராஷ்டிரா

4வது இடம்

சத்தீஸ்கார்


Next Story

மேலும் செய்திகள்