பெங்களூரு டெஸ்ட் - நியூசி.க்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம்

x

பெங்களூரு டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்துக்கு இந்தியா 107 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது

முதல் இன்னிங்சில் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த சர்ஃப்ராஸ் கான், 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், துரதிருஷ்டவசமாக 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 107 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ரன் ஏதும் எடுக்காத நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

-


Next Story

மேலும் செய்திகள்