குடும்பத்துடன் அயோத்தி ராமரை காண செல்லும் கெஜ்ரிவால்... பகவந்த் மான் பங்கேற்பு | Ayodhya

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் நாளை அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லவுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று கூறியிருந்த கெஜ்ரிவால், தனது குடும்பத்துடன் ராமர் கோயிலுக்கு பின்னர் செல்ல விரும்புவதாகவும் கூறியிருந்தார். பிராண பிரதிஷ்டை முடிந்து, பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் நிலையில், கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் நாளை செல்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்