பேஸ்புக் லைவில் எக்குத்தப்பாக பேசி தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட பிரபல நடிகர்

x

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பிரபல நடிகர்களுள் ஒருவரான உபேந்திரா, பிராஜாகியா என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், கட்சியின் ஆண்டு விழாவையொட்டி, கடந்த சனிக்கிழமை, பேஸ்புக் நேரலை மூலம், தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த உபேந்திரா, ஒரு சமூகத்தை குறிப்பிட்டு பழமொழி ஒன்றை எடுத்துக்காட்டி பேசியிருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில், உபேந்திரா மீது வன்கொடுமை சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தாம் தெரிவித்த கருத்துக்கு நடிகர் உபேந்திரா மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்