திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
x
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல, அலிபிரி நடைபாதை மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஆகிய 2 மலை பாதைகள் உள்ளன. இதில், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, கடந்த நவம்பர் மாதம் கனமழையால் முழுவதும் சேதமடைந்த‌து. இதனால், இந்த மலை பாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் மராமத்து பணிகளை தேவஸ்தானம் மேற்கொண்ட‌து. தற்போது பணிகள் நிறைவடைந்த‌தை அடுத்து, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி திறந்து வைத்தார். மேலும் திருமலைக்கு நடைபயணமாக சென்ற பக்தர்களை அவர் கொடியசைத்து அனுப்பினார். மீண்டும் மலை பாதை திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்