சூப்பர் மாடலாக மாறிய கூலித்தொழிலாளி

கேரளாவைச் சேர்ந்த 60 வயது கூலித் தொழிலாளி விளம்பர மாடலாக மாறி அசத்தி வருகிறார்.
x
கேரளாவைச் சேர்ந்த 60 வயது கூலித் தொழிலாளி விளம்பர மாடலாக மாறி அசத்தி வருகிறார். கோழிக்கோட்டை சேர்ந்த 60 வயதான மம்மிக்கா, சட்டை லுங்கியுடன் சாதாரணமாக தினக்கூலியாக பணிபுரிந்து வந்தார். மம்மிக்காவின் தோற்றத்தில் இருந்த மிடுக்கால் கவரப்பட்ட புகைப்படக் கலைஞர் ஷரிக் வயாலில், மம்மிக்காவின் உடை, சிகை அலங்காரம் என்று அனைத்தையும் அடியோடு மாற்றியதை அடுத்து, தற்போது மம்மிக்கா சூப்பர் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மம்மிக்காவின் புகைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மம்மிகாவிற்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்