திருடியது ஜெயிலர் மனைவி... போலீஸில் அடி வாங்கியது வேலைக்கார பெண் - ஆந்திராவில் நடந்த கொடுமை

ஆந்திராவில், ஜெயிலர் வீட்டில் திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணை, காவல் நிலையத்தில் கை கால்களை கட்டி வைத்து அடித்த நிலையில், பணத்தை எடுத்தது ஜெயலரின் மனைவி என தெரியவந்தது,
x
ஆந்திராவில், ஜெயிலர் வீட்டில் திருடியதாக கூறி வேலைக்கார பெண்ணை, காவல் நிலையத்தில் கை கால்களை கட்டி வைத்து அடித்த நிலையில், பணத்தை எடுத்தது ஜெயலரின் மனைவி என  தெரியவந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாபு என்பவரின் மனைவி உமாமகேஸ்வரி, சித்தூர் சிறைச்சாலையில் பணியாற்றும் ஜெயிலர் வேணுகோபால் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 17ஆம் தேதி, வீட்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாய் காணாமல் போனதாகவும், அதை நீ எடுத்தாய என,  வேணுகோபால் விசாரணை செய்துள்ளார். உமாமகேஸ்வரி இல்லை என்றதும்,  சித்தூர்  முதலாவது நகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்திலிருந்து உமா மகேஸ்வரியை அழைத்து வந்த போலீசார்,  ஜெய்பீம் பட பாணியில் கை கால்களை கட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். காலை முதல் மாலை வரை தாக்கிய நிலையில் இரவு வீட்டிற்கு அனுப்பி வைத்து, மறுநாள் வருமாறு கூறியுள்ளனர். இதற்குள்ளாக ஜெயிலர் வீட்டில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் எந்த இடத்திலும் உமாமகேஸ்வரியின் கைரேகை இல்லை என்பது தெரியவந்தது. ஜெய்லர் மனைவியிடம் நடத்திய விசாரணையில் கணவனுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து செலவு செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், உமா மகேஸ்வரியை காவல் நிலையம் அழைத்த போலீசார், இதையாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உமா மகேஸ்வரி, உண்மை என்னவென்று தெரியாமல்  கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்