கேரளாவில் ஒரே நாளில் 45,136 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
x
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்து 136 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள மாநில அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. கடைகள், மால், தியேட்டர் போன்றவை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கான இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவசியமின்றி வெளியே வருவோரை எச்சரித்து அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்