நாளை மறுநாள் கரையை நெருங்குகிறது புயல்

அந்தமானில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், நாளை மறுநாள் ஒடிசா அருகே புயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
அந்தமானில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், நாளை மறுநாள் ஒடிசா அருகே புயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாகவும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புயலானது டிசம்பர் 4ம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக இன்று அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் கனமழைக்கும், வடக்கு ஆந்திராவில் மிக அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒடிசாவில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் துறைமுகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்