"வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி" - எச்சரிக்கையுடன் இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரள கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க கேரள வருவாய்துறை அமைச்சர் ராஜன் வலியுறுத்தி உள்ளார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - எச்சரிக்கையுடன் இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்
x
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கேரள கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க கேரள வருவாய்துறை அமைச்சர் ராஜன் வலியுறுத்தி உள்ளார். காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதை, புரவி சூறாவளியை போலவே உள்ளதாகவும் பல்வேறு வானிலை ஆய்வு மையங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்தே,  ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜன் குறிப்பிட்டார். கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுத்திய அவர், 12 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்