காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து ஆலோசனை
பதிவு : அக்டோபர் 16, 2021, 12:27 PM
சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சி தலைவர் நியமனம் செய்வது தொடர்பாகவும், உட்கட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
 காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்  டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி , ஜெய் ராம் ரமேஷ்,  பா.சிதம்பரம், ஏ.கே ஆண்டனி , முகுல் வாசினிக்,குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பஞ்சாப், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மாநிலத்தில் நீடிக்கும் உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும்  பாஜக எதிர்ப்பு பிரச்சார விளக்க கூட்டம்  நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

0 views

281 மாணவர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி

கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

0 views

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

10 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

24 views

ஜெயில் - திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு; "ஒரு வாரத்தில் பதில் கூற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

115 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.