முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை: சீராக உள்ளது - எய்ம்ஸ் மருத்துவர்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை: சீராக உள்ளது - எய்ம்ஸ் மருத்துவர்கள்
x
உடல்நலக் குறைவு காரணமாக அவர், கடந்த புதன்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார். 
லேசான காய்ச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியான அறிக்கையில் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்