பம்பையில் பெரும்பாலான "கட்டிடங்களில் தீ பாதுகாப்பு வசதி இல்லை" - தீயணைப்புத்துறை கவலை

கேரளா மாநிலம் பம்பையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் பழமையானவை என்றும், இந்த கட்டிடங்களில் தீ பாதுகாப்பு தரமும் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், தீயணைப்புத்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பம்பையில் பெரும்பாலான கட்டிடங்களில் தீ பாதுகாப்பு வசதி இல்லை - தீயணைப்புத்துறை கவலை
x
கேரளா மாநிலம் பம்பையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் பழமையானவை என்றும், இந்த கட்டிடங்களில் தீ பாதுகாப்பு தரமும்  பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், தீயணைப்புத்துறையினர்  அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சபரி மலையில், சீசன் தொடங்கியுள்ள நிலையில், பம்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்தனர். அதில், பம்பையில் உள்ள பெரும்பாலான கட்டிடங்களின் வலிமையை சரிபார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். நிபுணர் பரிசோதனைகளுக்குப் பிறகுதான் இந்த  கட்டிடங்கள் திறக்கப்பட வேண்டும் என்றும், பம்பையில்  உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள முழு பாதுகாப்பு அமைப்பையும் மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் உள்ள தீயணைப்பு கருவிகள் வேலை செய்யவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பக்தர்கள் கடந்து செல்லும் நீலிமலை பாதையில் தீ ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் எந்த அமைப்பும் இல்லை என்றும், நீலிமலை பாதையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் புதிய தீ ஹைட்ரண்டுகள் நிறுவப்பட வேண்டும் எனவும் தீயணைப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்