உத்தரபிரதேச துணை முதல்வருக்கு கருப்பு கொடி - நிகழ்ச்சிக்கு செல்லும்போது விவசாயிகள் எதிர்ப்பு
உத்தரபிரதேச துணை முதலமைச்சரின் கார், விவசாயிகளின் கூட்டத்திற்கு நடுவே சென்று விபத்து ஏற்படுத்தியதால், வன்முறை வெடித்தது.
உத்தரபிரதேச துணை முதலமைச்சரின் கார், விவசாயிகளின் கூட்டத்திற்கு நடுவே சென்று விபத்து ஏற்படுத்தியதால், வன்முறை வெடித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில், அம்மாநில துணை முதல்வர் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள், அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளின் கூட்டத்திற்கு நடுவே சென்று கார் மோதியதில், 10 விவசாயிகள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலவரம் வெடித்தது. துணை முதல்வரின் கார் உட்பட 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கலவரம் மற்றும் வன்முறை காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story

