மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 - ஹர்னாஸ் சந்து பட்டம் வென்றார்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 பட்டத்தை சண்டிகரைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 - ஹர்னாஸ் சந்து பட்டம் வென்றார்
x
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 - ஹர்னாஸ் சந்து பட்டம் வென்றார்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2021 பட்டத்தை சண்டிகரைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார்.மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை சூடிக் கொண்ட அவர், இஸ்ரேலில் நடக்கும் 70 வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார். மிஸ் திவா சூப்பர்நேஷனல் 2021 பட்டத்தை புனேவைச் சேர்ந்த ரித்திகா கட்டானி தட்டிச் சென்றார். அவர் சர்வதேச மிஸ் சூப்பர்னேஷனல் 2021 போட்டியில் இந்தியாவின் முகமாக ஜொலிக்க உள்ளார். இப்போட்டியில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சோனல் குக்ரேஜா அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார். பாலிவுட் நட்சத்திரம் கிருதி சனோன், பாடகி கனிகா கபூர், மேசை பந்தாட்ட வீரர் பங்கஜ் அத்வானி, நடிகர் அங்கத் பேடி, ஆடை வடிவமைப்பாளர்கள் சிவன் மற்றும் நரேஷ், திரைப்படத் தயாரிப்பாளர் அஷ்வினி ஐயர் திவாரி ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவில் இடம்பெற்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்