எல்லை பிரச்னை - இந்தியாவை குற்றம் சாட்டும் சீனா

சீனாவின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை, இந்தியா சட்ட விரோதமாக தாண்டியதே, இந்திய சீன எல்லையில் நிலவக்கூடிய பதற்றத்திற்கு அடிப்படைக் காரணம் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
எல்லை பிரச்னை - இந்தியாவை குற்றம் சாட்டும் சீனா
x
2020 ஜூன் மாதத்தில், லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்தியா வீரர்களும், ஏராளமான சீன வீரர்களும் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சன வலுப்பெற்ற நிலையில், இரு தரப்பினரும், எல்லைப் பகுதியில் ராணுவ தளவடாங்களை குவித்துள்ளனர். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யுங் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் நிறுவனத்தின் பத்திரிக்கையாளர், லடாக் எல்லைப் பகுதி பற்றி கேள்வி எழுப்பினார்.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் மூன்று அதி நவீன எம்777 பீரங்கி படைப் பிரிவுகளை இந்தியா நிலை நிறுத்தியுள்ளது பற்றி இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் பற்றி ஹுவா சன்யுங்கிடம் கருத்து கேட்டார்.இதற்கு பதிலளித்த அவர் இந்தியா நீண்ட காலமாக முன்னேறி செல்லும் கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், சீன நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, இந்தியா சட்டவிரோதமாக தாண்டி வந்ததே இந்திய சீன எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு மூலக்காரணம் என்றார்.சர்ச்சைக்குரிய எல்லை பகுதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாகும் ஆயுதப் போட்டிகளை சீனா எதிர்க்கிறது என்றும்,
சீனா, தனது நிலப்பரப்பின் இறையாண்மையை பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட  உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்