இரு குடும்பம் இடையே சொத்து தகராறு - இளைஞரை தாக்கிய 4 பெண்கள்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மறையூர் பகுதியில், சொத்து தகராறு காரணமாக 4 பெண்கள் சேர்ந்து இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இரு குடும்பம் இடையே சொத்து தகராறு - இளைஞரை தாக்கிய 4 பெண்கள்
x
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மறையூர் பகுதியில், சொத்து தகராறு காரணமாக 4 பெண்கள் சேர்ந்து இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மறையூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராணி, யமுனா, பிருந்தா, ஷைலஜா ஆகியோருக்கும், மோகன்ராஜ் குடும்பத்தாருக்கும் இடையே பல வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக மோகன்ராஜ் நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற தீர்ப்பின் படி பிரச்சனைக்கு உரிய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க சென்றுள்ளார். அப்போது அவரை ஜெயராணி, யமுனா, பிருந்தா, ஷைலஜா ஆகியோர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நபர்களை, தேடி வருகின்றனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்