ரூ.5 கோடி பணத்திற்காக நடந்த கடத்தல் - ஐடி நிறுவன ஊழியரை கடத்திய சம்பவம்

பெங்களூருவில் பணத்துக்காக தன்னுடன் வேலை பார்த்த நபரை கடத்திய ஐடி நிறுவன ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
ரூ.5 கோடி பணத்திற்காக நடந்த கடத்தல் - ஐடி நிறுவன ஊழியரை கடத்திய சம்பவம்
x
பெங்களூரு கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் வினித்வர்தன். ஐடி நிறுவன ஊழியரான இவர், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் பெங்களூரு போலீசில் புகார் அளித்திருந்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வினித்தை அவருடன் வேலை பார்த்த எட்வின் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. தொழிலில் பங்குதாரராக இருந்து நீக்கப்பட்ட அவர், வினித்திடம் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணத்தை தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து வினித்தை கடத்தி சென்னையில் சிறை வைத்துள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய்க்கான டிடியை பெற்றுக் கொண்ட அவர்கள், அதை மாற்றுவதற்காக வங்கிக்கு வந்த போது போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட எட்வின், அறிவழகன், சந்தோஷ் என 3 பேரையும் கைது செய்த போலீசார் வினித்தை மீட்டனர்.
==Next Story

மேலும் செய்திகள்