ஓசூர் அருகே தனியார் விடுதியில் போதைப்பொருட்களுடன் 40 பேர் ஆபாச நடனம்
ஓசூர் அருகே ஆனெக்கல்லில் ரிசார்ட்டில், போதை பொருள் அருந்தி, ஆபாச நடனம் ஆடிய 11 பேர் கைதாகினர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஒசூர் அருகே கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆனெக்கல் பகுதியின் தனியார் ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு நடன நிகழ்ச்சி களைகட்டியுள்ளது. பெங்களூரு ஐ.டி. நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட 40 பேர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இரவில் மது மற்றும் போதை பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. ரகசிய தகவலின் பேரில் வந்த ஆனெக்கல் போலீசார், 40 பேரையும் சுற்றி வளைத்துள்ளனர். ஆனால், ஒரு பெண் உள்பட 11 பேர் மட்டுமே சிக்கிய நிலையில், அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். மது பாட்டில்கள் மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story