தொடர் நிலத் தகராறில், துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை

திருப்பதி அருகே சொத்து தகராறில், எதிரிகள் மீது சரமாரி நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.
தொடர் நிலத் தகராறில், துப்பாக்கிச் சூடு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை
x
குண்டூர் மாவட்டம் ராயபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சாம்பசிவ ராவ்க்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா, பாலகிருஷ்ணா ஆகியோரிடையே சொத்துத் தகராறு இருந்துள்ளது. ஊர் பஞ்சாயத்து மூலம் சமாதானம் செய்த நிலையில், அதை ஏற்காத சாம்பசிவராவ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த சண்டையால் ஆத்திர மடைந்த அவர், கைத்துப்பாக்கியுடன் ஆஞ்சநேயலு வீட்டு முன் வந்து நான்கு முறை சரமாரியாக சுட்டார். சிறிதும் அச்சமின்றி சர்வசாதாரணமாக சுட்டத்தில், பாலகிருஷ்ணா,  சிவா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பயங்கர காயங்களுடன் ஆஞ்சநேயலு தீவிர சிகிச்சையில் உள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார்,  சாம்பசிவராவை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால், பொதுமக்கள் தலைதெறிக்க ஓடும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்