ஆட்டோ மொபைல் துறை இந்தியாவின் இயக்கத்துக்கு புதிய அடையாளத்தை வழங்கும் - பிரதமர் நரேந்திர மோடி

மாறி வரும் சூழலில் சுற்றுச்சூழல், நிலம், வளங்களை பாதுகாப்பது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
x
மாறி வரும் சூழலில் சுற்றுச்சூழல், நிலம், வளங்களை பாதுகாப்பது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் நடைபெற்று வரும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது பழைய வாகனங்களை கழித்து கட்டும் தேசிய கொள்கையையும் அவர் வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த கொள்கையின் மூலம் ஆட்டோமொபைல் துறை இந்தியாவின் இயக்கத்திற்கு புதிய அடையாளத்தை வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள வாகன பெருக்கத்தின் நவீன மயமாக்கல், மிக முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தகுதியற்ற வாகனங்கள் விஞ்ஞான முறையில் சாலைகளில் இருந்து அகற்றப்பட உதவியாக இருக்கும் என குறிப்பிட்டார். தொழில்நுட்பம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் அந்த நேரத்தில் சுற்றுச்சூழல், நிலம், வளங்கள் ஆகியவற்றை காப்பதும் முதன்மையானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை எதிர்காலத்தில் செய்ய முடியும் என்றாலும் இயற்கை வளங்களை பூமித்தாயிடம் இருந்து மட்டுமே பெற முடியும் என்றும் அவர் கூறினார். நீடித்த வளர்ச்சிக்கான முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றும், பருவ நிலை மாற்றத்தில் பெரும் சவால்களை எதிர் கொண்டுள்ள நேரத்தில் மக்களின் நலன் கருதிப் பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்