"ஏழைகள் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை" - பிரதமர் மோடி

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
"ஏழைகள் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை" - பிரதமர் மோடி  

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்ட பயனாளிகளுடன் காணொலி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி  கலந்துரையாடினார்.கூட்டத்தில் பேசிய பிரதமர், குஜராத் மாநிலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் அரிசி விநியோகிக்கப்படுவதாக தெரிவித்தார்.இலவச ரேஷன் அரிசி ஏழைகளின் கவலையை குறைக்கிறது என்றும் இது உலகளாவிய தொற்றுநோய் நேரத்தில் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.சாதாரண மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது முக்கியம் என்பதால் ஏழைகளின் வாழ்க்கை மேம்பட முன்னுரிமை அளிக்கப்படுகிறது எனவும் பிரதமர் கூறினார்.நாட்டின் உணவு இருப்பு அதிகரித்துள்ள போதிலும்  பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு  விகிதம் குறையவில்லை என்றும் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டதால் போலி அட்டைகள் கோடிக்கணக்கில் நீக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்